1. பொருத்துக:
(a) திருக்கோவையார். 1. சேக்கிழார்
(b) திருப்பாவை 2. மாணிக்கவாசகர்
(c) கலிங்கத்துப்பரணி 3. ஆண்டாள்
(d) பெரியபுராணம் 4. செயங்கொண்டார்
(a) (b) (c) (d)
2. விடைத் தேர்க:
'பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்' - என்று கூறியவர் யார்?
3. விடைத்தேர்க:
'புதுநெறிகண்ட புலவர்' என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
4. 'இமயம் எங்கள் காலடியில்' என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
5. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
6. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?
7. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
8. கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
9. 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப் பெறும் நூல் எது?
10. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?